தருமபுரி,
தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தின் 4வது மாவட்ட மாநாடு தருமபுரியில் தோழர் கே.ஜி.சுகுமார் நினைவரங்கத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் கே.சௌந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் எம்.வெற்றிவேல் வரவேற்றார். துணைத் தலைவர் எம்.திருவேங்கடம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநிலச் செயலாளர் எம்.முருகேசன் துவக்கிவைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்.பெருமாள் வேலை அறிக்கை சமர்பித்தார். மாவட்டபொருளாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி வரவு – செலவு அறிக்கை வாசித்தார்.  அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலச் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, போக்குவரத்து கழக ஓய்வூதியர்நலச் சங்க மாவட்டத் தலைவர் கே.குப்புசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் எஸ்.பழணிச்சாமி நிறைவுறையாற்றினார். மாவட்ட இணைசெயலாளர் என்.சுந்தரராஜன் நன்றிகூறினார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுவிநியோக திட்டத்தை சீரமைத்து அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 20 ஆண்டுகாலம் பணி முடித்த அனைவருக்கும் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும், மாதந்தோரும் மருத்துவபடியாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், குடும்ப நல பாதுகாப்பு நிதியாக ரூ1.5லட்சம் வழங்க வேண்டும், மாணவர்களுக்கு வழங்கிய கல்வி கடணை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.