திருவள்ளூர்,
இந்திய மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களுக்கு சமூக நீதிகிடைக்கவில்லை என்பதால் அனைவரும் வெட்கப்பட வேண்டியதாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி வேதனையுடன் குறிப்பிட்டார்.

திருவள்ளூரில் 10 ஆம் வகுப்பு படிந்து வந்த 15 வயது மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கடந்த ஜூன் 11 ஆம் தேதி கடத்தி சென்று ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இது குறித்து, அந்த மாணவியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் 6 பேர் மட்டும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். மற்ற குற்றவாளிகளை இதுவரைக்கும் கைது செய்யவில்லை. பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜூலை 14 அன்று திருவள்ளூர் பஜாரில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டக் குழு உறுப்பினர் இ.மோகனா தலைமை தாங்கினார். மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக் குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. செல்வராஜ், ஆர்.ஏ. மோகனா, கே. ராஜேந்திரன், வட்டச் செயலாளர்ஆர்.தமிழ் அரசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் என். கீதா, இ. எழிலரசன் உட்பட பலர் கண்டன உரையாற்றினர். இந்த கண்டன கூட்டத்தில் உரையாற்றிய உ.வாசுகி, “2014 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒருபெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பெண்கள் பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ள நாடுகளில் நம் நாட்டிற்குதான் முதலிடம். இப்படி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் அனைவரும் வெட்கப்பட வேண்டும்” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.