கொல்லிமலை,
பிளாஸ்டிக் இல்லா தமிழகம், பிளாஸ்டிக் இல்லா கொல்லிமலை என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று தூய்மை பணி நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கத்தின் 25 ஆவது மாநில மாநட்டின் முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பிளாஸ்டிக் இல்லா தமிழகம், பிளாஸ்டிக் இல்லா கொல்லிமலை என முழக்கமிட்டு இந்திய மாணவர் சங்கம் சார்பில்கொல்லிமலையில் தூய்மை பணி நடைபெற்றது. கொல்லிமலை அறப்பளீஸ்வரர் ஆலயத்தை சுற்றிலும் தூய்மை செய்தனர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.டி.கண்ணன் தூய்மை பணியை துவக்கி வைத்தார். பிளாஸ்டிக் தீமைகள் குறித்தும், அதன் பயன்பாட்டை கைவிட வேண்டியும் மாணவர்கள் ஊர்வலமாக சென்று பிரச்சாரம் செய்தனர். மாவட்டச் செயலாளர் சரவணன், மாவட்டக்குழு உறுப்பிளர்கள் சரவணன், கோபால், ரஞ்சித், சக்தி, தேன்மொழி, காயத்திரி, ஜாஸ்மின் மற்றும் பலர் கலந்து கொண்டன.

Leave A Reply

%d bloggers like this: