திருவில்லிபுத்தூர்:
நிர்மலா தேவியின் ஜாமீன் மனு 6வது முறையாக திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் கோரி 6 வது முறையாக திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துசாரதா 6 வது முறையாக நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.