திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி, கல்வி சீர் வழங்கும் நாள், பெற்றோர்களுக்கு வீட்டுப்பாடம் குறுஞ்செய்தி அனுப்பும் நிகழ்வு என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமையாசிரியை ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் விஸ்வநாதன் கல்வி வளர்ச்சி நாள் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாணவர்களுக்கான நாற்காலி, ஸ்பீக்கர், மின்விசிறி, ஜெராக்ஸ் மிஷின் மற்றும் பிரிண்டர், விளையாட்டு உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பிற்கான கருவி, மழலையர்க்கான சி.டிக்கள், மிதியடிகள், எல்க்ட்ரானிக் பொருட்கள் என ரூ.1 லட்சத்
துக்கும் மேற்பட்ட பொருட்கள் கல்விச்சீராக எடுத்துக் கொண்டு பூலுவபட்டி, அம்மன் நகர் வழியாக மாணவ மாணவியர் பறை இசை முழங்க, சிலம்பம் விளையாட்டுடன் பெருந்திரளாக வந்தனர். மரம் நடும் உறுதி மொழி ஏற்கப்பட்டதுடன், விளையாட்டுச் சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டது. பள்ளி மாணாக்கர்கள் 562 பேருக்கும் வீட்டுப்பாடம் மற்றும் பள்ளிச் செய்திகள் குறுஞ்செய்தியாக அவர்களது பெற்றோருக்கு அனுப்பும் சேவையும் தொடங்கப்பட்டது.

ஆசிரியர் மணிகண்ட பிரபு நன்றி கூறினார். பெரிச்சிபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பு மூலமாக பள்ளி வளாகம் மற்றும் பள்ளியயை சுற்றியுள்ள பகுதியில் இருந்த புல் பூண்டு ஆகியவற்றை சுத்தம் செய்தனர். இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் எ.ஞானம்மாள் வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரிய சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தேசியக் கொடியை ஏற்றினார். பட்டதாரி ஆசிரியர் இராஜமாணிக்கம் நன்றி கூறினார். ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.  பள்ளியில் மாறுவேடப் போட்டி, பாடல், காமராஜர் குறித்த பேச்சுப்போட்டி என நடந்தது.பங்கேற்ற அனைவருக்கும் மரம் ஐயப்பன் மரக்கன்று நட்டு மரம் வளர்ப்பதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

திருப்பூர் செல்லம்மாள் காலனி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் கல்வி வளர்ச்சி நாள் ஞாயிறன்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் வே.நாகராஜ் கணேஷ் குமார் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பொன்.பழனிச்சாமி தலைமை தாங்கினார். கிராமக்கல்விக் குழுத்தலைவர் இரா.சின்னச்சாமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுதா, ப்ரோ நிட்ஸ் கார்மெண்ட்ஸ் இயக்குநர் ரவிக்குமார், கல்விக்குழு உறுப்பினர்கள் கார்த்தி, ரவி, ஆகியோர் பங்கேற்றனர். ஐந்தாம் வகுப்பு மாணாக்கருக்கு நன்கொடையாளர் சுப்பிரமணியம் ஆங்கில அகராதி புத்தகத்தை வழங்கினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் டி. எஸ்.வேணுகோபால் உரையாற்றினார். ஆசிரியை நா.தீபா நன்றி கூறினார். திருபபூர் காங்கேயம் ரோடு விஜயாபுரததில் உள்ள பிரைட் பப்ளிக் பள்ளியில் 16ஆம் தேதி காமராசர் பிறந்த தின விழா நடைபெற்றது. காமராசரின் உருவப் படத்திற்கு பள்ளியின் முதல்வா் அனுராதா ராஜா மலர் தூவி மரியாதை செயதார். தமிழாசிரியை கிரேஸி சிறப்புரை ஆற்றினார்.

திருப்பூர் அடுத்துள்ள அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியை சாந்தி தலைமை ஏற்றார். முதுநிலை உதவி தலைமையாசிரியைகள் நாகமணி, துளசிமணி ஆகியோர் முன்னிலையில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் கமரன் வரவேற்றார். 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகள் இந்துமதி, பிரதீபா, அஸ்மா ஆகியோருக்கும், பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஜுவைரியா, சௌமியா, சாந்தினி, பொன்மதி ஆகியோருக்கு பரிசு கோப்பைகள் மற்றும் 8 ஆயிரத்து 500 ரூபாயை ரொக்கமாக வழங்கப்பட்டது. தமிழாசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.