சென்னை,
தமிழ் நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் தொழிற் சங்கம் துவக்கி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி சென்னை எழும்பூரில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவர் எ.தேவராசன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் க. ரமேஷ்குமார், தலைமை நிலையச் செயலாளர் வி.பி. சீனிவாசன் நிர்வாகிகள் மு.பக்கிரிசாமி, அ.முத்துசாமி, கே.ஆர்.பாலசுந்தரம், க.முனியாண்டி, செந்தமிழ்செல்வி ஆகியோர் உரையாற்றினர்.

தமிழ்நாடு திருக்கோயில்களில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

நிர்வாகிகள்
தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் சென்னை கோட்ட கவுரவத் தலைவராக எஸ்.ராஜூவ் குருக்கள், தலைவராக எஸ். தனசேகர், செயலாளராக இரா. ரமேஷ், பொருளாளராக தே. குகன் உள்ளிட்ட 16 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.