சிதம்பரம்,
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பத்தில் தனியார் அனல்மின் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தமின்நிலையத்திற்கு பின்புறமாக புதுக்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் வசித்து வருகின்றனர்.

அனல் மின்நிலையத்தில் நிலக்கரி கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ரயில்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் நிலக்கறியை மலைபோல் குவித்து வைத்துள்ளனர். இதனால், நிலக்கரித்தூள்கள் காற்றோடு கலப்பதால், குடிநீர் மற்றும் உணவு பொருட்கள் மாசுபடுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர். இது பற்றி கிராமக்கள் அனல்மின் நிலைய நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை புகார் செய்துள்ளனர். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேலும் இந்த அனல்மின்நிலையத்துக்கு கடல் வழியா நிலக்கரியை இறக்க துறைமுகம்கட்டும் பணியும் புதுக்குப்பம் கிராமத்தில் நடந்து வருகிறது. துறைமுகம் அமைத்தால் புதுக்குப்பம் கிராமம் பாதிப்படையும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

துறைமுகம் அமைக்கும் பணியைநிறுத்த வேண்டும், அனல் மின்நிலையத்தை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமக்கள் துறைமுகம் அமைக்கும் இடம் முன்பே அமர்ந்து தொடர்ந்து இரண்டு நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈபட்டு வருகின்றனர். ஞாயிறன்று (ஜூலை 15) நடந்த போராட்டத்தில் காற்றில் பறக்கும் கரித்துகள்களால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறோம் என்பதை வலியுறுத்தும் விதமாக பெண்கள் வாயில் துணியை கட்டிக்கொண் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். “போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை அரசு அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, காற்றில் நிலக்கரி துகள்பரக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல் வழியே நிலக்கரி இறக்குமதிதுறைமுகம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும். இதுகுறித்து அரசு அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்” சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: