சேலம்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் வடக்கு மாநகர் குழு சார்பில் இளைஞர் முழக்க மாத இதழின் 50 வது வாசகர் வட்டம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் வடக்கு மாநகர் குழு சார்பில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் இளைஞர் முழக்க வாசகர் வட்டம் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது 50 அமர்வு நிறைந்துள்ளது. இதில் கட்டுரை வாசிப்பு, நூல் அறிமுகம், திரைப்பட விமர்சனம், பாடல் பயிற்சி, கதை சொல்லுதல், கவிதை வாசித்தல், போராட்ட அனுபவம், சிறை அனுபவம் விவாதித்தல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வந்தது. இதில் வாலிபர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்று வருகின்றனர். வாலிபர் சங்க தலைவர்கள், சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், தமுஎகச, விசிக நிர்வாகிகள், அறிவியல் இயக்க நிர்வாகிகள் என்.ரெஜீஸ்குமார், ஆர்.வேல்முருகன், பி..சகஸ்ரநாமம், தாரைபிதா, ஐ..காஜாமைதீன், எஸ்..பாலா, நிறைமதி, மதுரபாரதி உள்ளிட்டு பலர் பங்கேற்று வருகின்றனர்.

இந்த வாசகர் வட்டத்தில் இளைஞர் முழக்கம் மட்டுமின்றி முற்போக்கு கருத்துகளை தாங்கி வரும் தீக்கதிர் நாளிதழ், மார்க்சிஸ்ட் மாத இதழ் உள்ளிட்டவற்றில் வரும் கட்டுரைகள் குறித்துவிவாதம் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. மேலும் இதே காலத்தில் 8 நாவல்கள் உட்பட 61 நூல்கள் அறிமுகம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது. வசாகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சசிக்குமார், மாவட்டச் செயலாளர் என்.பிரவீன்குமார், வி.வெங்கடேஷ் ஆகியோர் அதிகளவிலான கூட்டங்களில் பங்கேற்றவர்கள் என்ற ரீதியில் 50 வது அமர்வில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: