திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கனன்று வாரந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி தலைமையில் நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2006ம் ஆண்டு மதுரையை தலைமையிடமாகக் கொண்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தனியார் சேமிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்கள். இவர்கள் கூலி வேலைக்கு செல்லக்கூடியவர்களிடம் இருந்து மாதம் ரூ.100 முதல் 2000 வரை பணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில், தொகை முதிர்வு அடைந்துள்ளது. மேலும், ரூ.20 கோடி அந்நிறுவனம்மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, மோசடி ஈடுபட்ட நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, செலுத்திய பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்று மனுவில் தெரிவித்து இருந்தனர்.

திருப்பூர், கல்லாங்காடு ராஜா நகரை சேர்ந்த பேபி மற்றும் அவரது கணவர் காளியப்பன் ஆகியோர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், வருவாய் அலுவலரிடம் மனு அளித்து கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக கல்லாங்காடு ராஜா நகர் பகுதியில் வசித்து வருகிறோம். இந்த இடத்தை கிரையம் செய்துதான் வீடு கட்டினோம். தற்போது இந்த இடத்தை பஞ்சமி நிலம் எனக் கூறுகின்றனர்.  இதனால் மகளுக்கு நிலத்தை பெயர் மாற்றம் செய்ய முடியவில்லை. எனவே இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து, பெயர் மாற்றம் செய்து தர வேண்டும் எனக்கூறினர். \

ஆதித்தமிழர் பேரவை சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர், நல்லூரை அடுத்த காளிபாளையம் அருந்ததியர் தெருவில் 30க்கும் மேற்பட்ட குடுங்
பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்து வசதியில்லை. மேலும் குடிநீர், சாக்கடை, மின் விளக்கு ,ஆரம்ப சுகாதார நிலையம், பொது கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் உள்ளனர். எனவே, அடிப்படை தேவைக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்து உள்ளனர். பட்டம்பாளையம் ஊராட்சி பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோனாபுரம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. ஒரு குடும்பத்திற்கு குடிநீர் குழாய் மூலம் 4 குடங்கள் தண்ணீர் மட்டுமே கிடைக்கின்றது. இது போதுமானதாக இருப்பதில்லை. மேலும், இப்பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, போர்வெல்மூலம் ஆழ்துளைக்கிணறு அமைத்துதர வேண்டும் என மனுவில் தெரிவித்வித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.