தீக்கதிர்

சாலை விபத்தில் பெண் செய்தியாளர் ஷாலினி பலி…!

சின்னாளபட்டி:
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் அங்கையர்கரசி(24). இவர், சென்னை மாலைமுரசு தொலைக்காட்சியில் செய்தியாளராக உள்ளார். இவரது வீட்டிற்கு அவருடன் பணியாற்றும் ஈரோட்டைச் சேர்ந்த செய்தி யாளர் ஷாலினி(24), ராம் குமார், சதீஸ், கோகுல் ஆகியோர் காரில் சென்றுவிட்டு திங்களன்று காலை சென்னைக்கு திரும்பி கொண்டுஇருந்தனர்.

அப்போது கொடை ரோடு அருகே பொட்டிகன் குணம் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த அனைவரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதில் சிகிச்சை பலன் இன்றி ஷாலினி உயிரிழந்தார்.

இந்நிலையில் ஷாலினியின் துயர மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து அவரது குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.