தாராபுரம்,
தாராபுரம் அருகே கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருவாய்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் மேட்டுக்கடையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டிப்பர் லாரியை சோதனை செய்தபோது கிராவல் மண் ஏற்றிக்கொண்டு பல்லடம் நோக்கி செல்வது தெரிய வந்தது. மேலும் உரிமம் இல்லாததும் தெரியவந்தது. திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த நடராஜமூர்த்திக்கு சொந்தமான லாரி என்பது தெரியவந்தது. இந்நிலையில் லாரியை பறிமுதல் செய்து தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் குண்டடம் காவல்துறை ஒப்படைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: