தூத்துக்குடி;
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மத்திய மாநில அரசுகள் மக்களை அச்சுறுத்து
வதாக சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் ஹேமலதா தூத்துக்குடியில் செய்தியாளர்க
ளுக்கு பேட்டியளித்தபோது கூறினார்.

தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி மக்கள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றனர். அப்போது காவல்துறை நடத்திய தடியடி, துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் ஜூலை 15 அன்று இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் ஹேமலதா, மாநில துணைப்
பொதுச் செயலாளர் ஆர்.கருமலையான்,மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிர
மணியன் உள்ளிட்டோர் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஸ்னோலின், ஜான்சி, கார்த்தி ஆகியோரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். பின்னர் செய்தி
யாளர்களிடம் மேலும் கூறியதாவது :

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்
சாலை மண், நீர் மற்றும் காற்று ஆகியவற்றை மாசு படுத்தும் வகையில் இயங்கி வந்தது. இது இப்பகுதி மக்களுக்கு பல நோய்களை அளித்து வந்தது. இந்த சூழ்நிலையை கண்டு கொள்ளாத நிறுவனம் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து முறையான ஒப்புதல் பெறாமல் ஆலையின் தற்போதைய ஆற்றலை இரட்டிப்பாக்குவதற்காக, ஆலையை விரிவுபடுத்தும் முயற்சியில்
ஈடுபட்டது. இதை அறிந்த பொதுமக்கள் கோபமடைந்ததோடு கிளர்ந்தெழுந்தனர்.

இந்த போராட்டம் நீண்ட காலமாக அமைதியாக நடந்தது. மக்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல், பெருநிறுவனத்துடன் இணைந்து மத்திய மாநில அரசுகள் மக்களை அச்சுறுத்த விரும்பின. மக்களின் ஜனநாயக முறையிலான ஆர்ப்பாட்டத்தை அவர்கள் அனு
மதிக்கவில்லை. கடந்த மே 22 அன்று 13 அப்பாவி உயிர்களைக் கொன்றதில் உச்சக்கட்டத்தை அடைந்து. சுத்தமான காற்றுக்காகவும் தண்ணீருக்காகவும் கிளர்ந்தெழுந்த அப்பாவி மக்கள் பலர் காயமடைந்தனர். அது மட்டுமின்றி மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மக்களை பயமுறுத்தி நள்ளிரவில் கைது செய்தனர். பல இளைஞர்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்த விசாரணை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ தலைமையில் நடக்க வேண்டும் என சிஐடியு சார்பில் வலியுறுத்துகிறோம். அப்பாவி
பொதுமக்களுக்கு எதிரான பொய்வழக்குகள் நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும். இன்றளவிலும் மக்கள் தொடர்ந்து காவல் துறையின் பயங்கரவாதத்தின் கீழ் உள்ளனர். அப்பாவி இளைஞர்களின் கண்மூடித்தனமான கைதுகள் மற்றும் சித்ரவதை தொடர்கிறது. தினசரி ஊதியம் பெறுபவர்கள் மற்றும் பிற சாதாரண உழைக்கும் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூலம் நிலத்தடி நீர் மாசுபாடு காரணமாக குடிநீரின் கடுமையான பற்றாக்குறையை ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகே உள்ள அனைத்து கிராமங்களும் எதிர்கொள்கின்றன. சுத்தமான குடிநீர் வசதி ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்பட வேண்டும். வேலைகளை இழந்த தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு நட்புடன் கூடிய நவீன தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும், என்கிற கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
செப்டம்பர் 5 ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் இந்த தொழிலாளர் விரோத, தேச விரோத நடவடிக்கைகளை நிறுத்த, விவசாயிகள் சங்கம் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் சங்கத்துடன் சிஐடியு இணைந்து கொள்கிறது. ஆகஸ்ட் 9ஆம்
தேதி வெள்ளையனே வெளியேறு முழக்க நாளில் நாடு தழுவிய சிறைநிரப்பும் கிளர்ச்சி நடைபெறும்.

நிதி உதவி:                                                                                                                                                                        ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தில் பங்கேற்கும் பேரவைக் கூட்டம் ஜூலை 15 அன்று தோழர் .பி.சி.வேலாயுதம் நினைவரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. கூட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.ரசல் தலைமை வகித்தார். அகில இந்திய தலைவர் டாக்டர் ஹேமலதா, மாநில துணை பொதுச்செயலாளர் ஆர்.கருமலையான், மாநில துணைத்தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், மாவட்டச் செய
லாளர் வை.பாலசுப்பிரமணியன், மாநிலக் குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: