உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சுயகோல் அடித்த முதல் வீரர் என்ற அவப்பெயருக்கு ஆளானார் குரோஷிய வீரர் மான்ட்ஜூகிச்.

 

ரஷ்ய உலகக் கோப்பையில் மொத்தம் 12 சுயகோல் அடிக்கப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.இதற்கு முன் 1998-ஆம் ஆண்டு பிரான்ஸ் உலகக்கோப்பை தொடரில் 6 சுயகோல் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாக இருந்தது.

 

பீலேவுக்கு பிறகு 58 வருட கால இடைவெளியில்,உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் கோலடித்த இளம் வீரர் என்ற பெருமையை பிரான்ஸ் வீரர் மாப்பே (19 வயது) பெற்றார்.பிரேசில் ஜாம்பவான் பீலே 1958-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் கோலடித்து அசத்தினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.