ஜகர்தா :

இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா என்ற பகுதியில் உள்ள சோரோங் மாவட்டத்தில் பண்ணையில் இருந்த 292 முதலைகளை கிராம மக்கள் கொன்று குவித்தனர்.

தனது கால்நடைகளுக்கு புற்களை வெட்ட சென்ற 48 வயதாகும் ஒருவரை முதலை பண்ணையில் இருந்த முதலை ஒன்று தாக்கியதில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் பண்ணையினுள் புகுந்து அங்கிருந்த முதலைகளை கொன்று குவித்தனர். இதில் 292 முதலைகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், பண்ணை நிர்வாகம் மேற்கொண்டிருக்கும் பாதுகாப்புகள் அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: