ஈரோடு,
12 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர்அணையின் நீர்மட்டம் 88 அடியை எட்டுகிறது.

கேரளாவிலும் நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கோவை மாவட்டம் பில்லூர் அணைநிரம்பி, உபரி நீர் பவானி சாகர் அணைக்கு வருவது அதிகரித்துள்ளது. இதனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானி சாகர் அணை நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளது. ஞாயிறன்று காலை நிலவரப்படி, பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 691 கன அடி நீர்வந்து கொண்டிருப்பதால், அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம்87. 79 அடியாக உள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு பவானி சாகர் அணை நீர்மட்டம் 88 அடியை எட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: