தூத்துக்குடி,
தூத்துக்குடி நகரில் வெளிநாட்டு பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்தில் அவ்வப்போது வெளிநாடுகளில் இருந்து பழைய இரும்பு கழிவுகள், மருத்துவக் கழிவுகள், மின்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இறக்குமதி செய்து அதை வியாபாரம் செய்து வருகின்றனர். தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஸ்கிராப் என்ற பெயரில் குறைவாக வரிகள் கட்டி இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். ஏற்கெனவே தூத்துக்குடி மாநகர் சாலைகள் வழியாக‌ இரவு நேரங்களில் நிலக்கரி மற்றும் கெமிக்கல் வகை கழிவுகளை திருட்டுத்தனமாக கொண்டு சென்று வருகின்றனர். தற்போது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து குப்பையை இறக்குமதி செய்து, அதனை திறந்த வெளியில் எவ்வித பாதுகாப்புமின்றி சாலையில் சிதறியவாறு கொண்டு செல்கின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் பரவிவருகின்றன. துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் மரத்தடிகளுக்கு உரிய மருந்து தெளிப்பான் இல்லாமல் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றது. ஒரு புறம் பாலித்தீன் ஒழிப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் இதனைக் கண்டு கொள்வதில்லை. பணத்திற்காக துறைமுக சுங்கதுறை அதிகாரிகள் இதற்கு துணை போவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற கழிவு பொருட்களை இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: