சென்னை,
மூன்றாம் நபர் காப்பீடுக்கான தொகை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும், தமிழக அரசு டீசல் மீதான வாட் வரி விதிப்பைக் குறைக்க வலியுறுத்தியும் ஜூலை 20 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சேலத்தில் இருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் சரக்கு லாரிகளுக்கான முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றின் சார்பில் டீசல்விலை உயர்வைக் கண்டித்து வரும் 20ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிமுதல் அகில இந்திய அளவிலான லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்குகிறது. இந்தப் போராட்டத்தினால், சேலத்தில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் சரக்கு லாரிகளுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. 20ஆம் தேதி லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தொடங்கவுள்ள நிலையில் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: