காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் இரட்டை திருமாளிகையில் கற்சிலைகள், தூண்கள் மாயமானது குறித்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகிகள் 6 பேர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.

கோவிலில் சிதிலமடைந்த இரட்டைதிருமாளிகையை புதுப்பிக்க, 2012 -ஆம் ஆண்டு ஒன்றே முக்கால் கோடிரூபாய் ஒதுக்கப்பட்டு தொடங்கப்பட்ட பணிகள், பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இரட்டை திருமாளிகையில் இருந்த வேலைப்பாடு மிக்க சிவன், பார்வதி, விநாயகர், முருகன் கற்சிலைகளும் கல்தூண்களும் மாயமாகின. இதுகுறித்து டில்லிபாபு என்பவர்அளித்த புகார் மீது சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்யவில்லை. இதைத்தொடர்ந்துகாஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், கூடுதல் திருப்பணி ஆணையர் கவிதா உள்ளிட்ட 6 பேர் மீதுகாவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில்,கோவில் நிர்வாகிகள் 6 பேர் மீதும் சிவகாஞ்சி காவல்துறையினர் ஞாயிறன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: