திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இந்திய மாணவர் சங்க திருப்பூர் மாவட்ட 3 ஆவது மாநாடு பழைய பேருந்து நிலையம் அருகில் அபிமன்பு நினைவரங்கத்தில் (பி.ஆர்.நிலையத்தில்) ஞாயிறன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ப.கதிர்வேல் தலைமை வகித்தார், சங்க கொடியை மாவட்ட துணை தலைவர் ரேவந்த் ஏற்றிவைத்தார். மாவட்ட துணை செயலாளர் சுபாஷ் வரவேற்று பேசினர். இந்திய மாணவர் சங்க கோவை மாவட்ட செயலாளர் கேப்டன் பிரபாகரன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வளர்மதி மாநாட்டை வாழ்த்திப்பேசினார், மாவட்ட துணை செயலாளர் தௌ.சம்சீர் அகமது அறிக்கை முன் வைத்து பேசினர்.

இன்னதாக, இம்மாநாட்டில், ஏழை மாணவர்களின் மருத்துவகனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், அரசாணை எண் 92 அனைத்து தனியார் பள்ளி நிறுவனங்களிலும் அமல்படுத்த வேண்டும், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களிலும் மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கிட வேண்டும், மேலும் கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளை அமைக்க வேண்டும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை ஆய்வு செய்து ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெய்து கட்டமைப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்பன பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர். இந்த மாநாட்டில் புதிய மாவட்ட தலைவராக எம்.முகிலன், மாவட்ட செயலாளராக தௌ.சம்சீர் அகமது உள்ளிட்ட 25 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்தனர், முடிவில் சங்கத்தின் மாநில துணை செயலாளர் நிருபன் சக்ரவர்த்தி நிரைவுரையாற்றினார்.

Leave A Reply

%d bloggers like this: