மும்பை;
மராட்டியத்தில், கடந்த மார்ச் முதல் மே வரையிலான கால கட்டங்களில், விளைச்சல் குறைவு, கடன், வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்ப செலுத்தஇயலாமை ஆகியவற்றால், 639 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட தாக மராட்டிய அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.மராட்டிய மாநில சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி தலைவர் தனஞ் செய் முண்டே மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, மாநில வருவாய் துறை மந்திரி சந்திரகாந்த் பாடீல் கூறியதாவது:

“மார்ச் 1 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் 639 விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில், 188 பேர் இழப்பீடு பெற
தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளார்கள். 188 பேரில், 174 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 122 விவசாயிகள் இழப்பீடு பெற தகுதியற்ற
வர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய 329 பேரின், குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக விசாரணை நடக்கிறது” என்றார். எதிர்க்கட்சி தலைவர் முண்டே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், “கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கான பயிர் இழப்பு காப்பீடு,பயிர்க்கடன் மற்றும் பயிர்களுக்கு குறைந்த பட்ச விலை உள்ளிட்ட அரசின் திட்டங்கள் தோல்வி அடைந் துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் 13 ஆயிரம் விவசாயிகள், தங்கள் உயிரை மாய்த்துள்ளனர். கடந்த ஒரு
வருடத்தில் மட்டும் 1,500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்.

அதேவேளையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக பதிலளித்த முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், “விவசாயிகள் கடன் பெற்றவர்களி
டம் அடைமானமாக வைத்துள்ள நிலத்தை மீட்பதற்கான போதுமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.