புதுதில்லி:
மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் ஜனநாயகப் படுகொலைகள் நடைபெறுவதைக் கண்டித்து வரும் ஜூலை 24 அன்று தேசிய அளவில் தில்லியில் கண்டன முழக்கம் எழுப்பிட
இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.

இதுதொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
இடது முன்னணி மற்றும் ஜனநாயக வெகுஜன அமைப்பு கள் ஆட்சியாளர்களின் குண்டர்களால் குறிவைத்துத் தாக்கப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியானது தன்னுடைய பயங்கரவாத மற்றும் பாசிஸ்ட்
தாக்குதல்களை இடது முன்னணிக்கு எதிராக மேற்கொண்டு வருவது தொடர்கிறது. 2016 ஜூனுக்குப் பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 31 உறுப்பின ர்களும், ஆத
ரவாளர்களும் திரிணாமுல் குண்டர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் இடது முன்னணித் தலைவர்கள் வெற்றி பெற்ற உள்ளாட்சி அமைப்புகளை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் வேலைகளிலும் அது இறங்கியிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் வன்முறைகளில் 11-க்கும் மேற்பட்ட இடதுசாரி ஊழியர்கள் கொல்லப்பட்டனர். திரிணாமுல் காங்கிரசாரின் குண்டர்களுக்கு சாதகமாக காவல்துறை கைகட்டி நின்றது. இதுதொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் உச்சநீதி
மன்றம், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி ஜனநாயகப்பூர்வமாக மேற்கு வங்கத்தில் தேர்தல்கள் நடைபெற வில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது எனவும் இடதுசாரிக்கட்சி
கள் அறிக்கையில் கூறியுள்ளன.

திரிபுராவிலும், மேற்கு வங்கத்திலும் நடைபெறும் இத்தகு ஜனநாயகப் படுகொலைக்கு எதிராகவும், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாத்திடவும், நாட்டிலுள்ள அனைத்துக் கிளைகளும் கண்டன முழக்கங்களை எழுப்ப வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: