மேட்டூர்;
மேட்டூர் அணை நீர் அளவு 80 அடியை தாண்டியுள்ளது. கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு மேட்டூர் அணை நீர் அளவு 80 அடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்திருக்கும் நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இதனையடுத்து கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், இரண்டாவது நாளாக தமிழக எல்லையான பிலிகுண்டுவில் 50 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டி
ருக்கிறது. ஒகேனக்கல் அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளது.

காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு
நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப் படி மேட்டூர் அணை நீர்மட்டம் 79.45 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 45,000 கன அடியில் இருந்து 46,210 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 41.41 டி.எம்.சியாக உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 80 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு 80 அடி யை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.65 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 61.75 அடியாக உள்ளது. 124.8 அடி உயரம் கொண்ட கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம், 121.4 அடியாக உள்ளது. கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து 41,000 கன அடியாக உள்ள நிலையில், அணை நிரம்பும் என்றும், இதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே திறக்கப்படும் என்றும் எதிர்பார்க் கப்படுகிறது. இதனால் காவிரி கரை
யோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை தொடுக்கப்பட் டுள்ளது. காவிரி கரையோர பகுதிமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள் ளது.

ஹேமாவதி அணைக்கு வினாடிக்கு 25,000 கன அடி நீர் வருவதால் வேகமாக நிரம்பி வரு
கிறது. இதன் காரணமாக 3 அணை களில் இருந்தும் ஒட்டுமொத்தமாக 1 லட்சம் கன அடி நீர் வரை காவிரியில் நீர் திறக்க வாய்ப்புள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 46,613 கன அடியாகவும், நீர் மட்டம் 80 அடியாகவும் உள்ளது.விவசாயிகள் சங்கம் கோரிக்கை
இதனிடையே திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், தற்போது கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக தமிழக அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கர்நாடக அரசு வழக்கம் போல கூடுதலான உபரி நீரை காவிரியில் திறந்து விட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதே அளவிற்கு மழை நீடித்தால் மேட்டூர் அணை முழு கொள்ளளவும் நிரம்ப வாய்ப்புள்ளது. ஆனால் தமிழக அரசு காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளபடி கர்நாடக அரசிடமிருந்து மாதாமாதம் காவிரி நீர் பெறுவதற்கு மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். மேலும் பருவ காலங்களில் மழை நீரை சேமித்து வைப்பதற்கும், வீண்ஆகாமல் தடுப்பதற்கும் ஆங் காங்கே தடுப்பணைகள் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. அதனால் காவிரி ஆற்றில் குறிப்பிட்ட இடங்களில் கதவணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு டெல்டா மாவட்ட நீர் நிலைகளை தமிழக அரசு தீவிரமாக தூர் வாரும் பணிகளை நீர்நிலைகளில் நிறைவேற்ற வேண்டும். இப்பணி நடைபெறாவிட்டால் நதிநீர் வீணாகும் சூழ்நிலை உண்டாகும். காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்னும் தூர்வாரப்படாமல் நீர் நிலைகள் புதர் மண்டிக்கிடக்கிறது. இதன் பயனாக கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேராது. எனவே தமிழக அரசு குறைந்த பட்சம் 1000 கோடி ரூபாயை ஒதுக்கி தூர்வாரும் பணியை மேம்படுத்தி கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்த ஆண்டு நீர்வரத்து இருப்பதன் காரணமாக பொது மக்கள், புதுமணத்தம்பதிகள் ஆடிப்பெருக்கை உற்சாகமாக கொண்டாட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட வேண் டும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: