அகமதாபாத் :

குஜராத் மாநிலத்தின் சூரத்தைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் குஜராத் மாநில பாஜக துணைத்தலைவர் பானுசாலி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் பானுசாலி தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அந்த பெண் தெரிவித்திருந்தார்.

குஜராத் மாநில பாஜக துணைத்தலைவர் ஜெயந்தி பானுசாலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த மனு அடுத்தகட்ட விசாரணைக்காக கபோதரா காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சூரத் காவல் ஆணையர் சதீஸ் சர்மா தெரிவித்தார். ஆனால், இதுவரை அவர்மீது வழக்கு பதியப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Leave A Reply

%d bloggers like this: