வாஷிங்டன்,
ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.32200 கோடி வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனம், குழந்தைகளுக்கான பவுடர் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவில் இந்த நிறுவனம் விற்பனை செய்த முகப் பவுடர்களைப் பயன்படுத்தியதால், தங்களுக்கு கருப்பை புற்று நோய் வந்ததாக ஏராளமான பெண்கள் பல்வேறு நீதிமன்றங்களில் வழங்கு தொடர்ந்துள்ளனர்.

ஜான்ஸன் பவுடர்களில் ஆஸ்பெஸ்டாஸ் என்ற பொருள் கலக்கப்படுகிறது. இது பெண்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளாககூறப்படுகிறது. இந்த நிலையில், செயின் லூயிஸ் நகரில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்திருந்த 22 பெண்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்குமாறு ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனத்துக்கு அந்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து நிறுவனத்தின் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

எங்களது தயாரிப்புகளில் ஆஸ்பெஸ்டாஸ் இல்லை என்பதிலும், அவற்றைப் பயன்படுத்துவதால் புற்று நோய் உண்டாகாது என்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். நியாமற்ற நீதி விசாரணை காரணமாகவே இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. எங்கள் நிறுவனத்துக்கு எதிரான தீர்ப்பை பெறுவதற்காக, மிஸரி மாகாணத்தில் வசிக்காதவர்கள் கூட, அந்த மாகாணத்திலுள்ள செயின்ட் லூயிஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது இதை உறுதிப்படுத்துகிறது என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: