சமூக ஊடகத்தின் மீது தனதுஅக்னி பார்வையை திருப்பியிருக்கிறது மோடி அரசு. நவீன தொழில்நுட்பம் வழங்கியுள்ள தனிமனித சுதந்திரம் அது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகளை போல அதையும் மிரட்ட முடியாதா என்று அலைகிறது. “சமூக ஊடக தகவல் அமைப்பு” என்ற பெயரில் அதை கண்காணிக்கும் நிறுவனத்தை உருவாக்கப் போகிறது. அதன் வேலை முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சகல சமூக ஊடகங்களையும் கண்காணித்து அரசுக்கு தெரியப்படுத்துவது. குறிப்பாக டிரெண்டுகளை ரிப்போர்ட் செய்வது. “கோ பேக் மோடி” போன்ற டிரெண்டுகள் ஆட்சியாளர்களை படுத்துகிறது போலும். இதில் பெரிய கொடுமை என்னவென்றால்
இ மெயிலையும் வாட்சப்பையும்கூட இந்த கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருவது. இது கடிதம் எழுதும் நமது அந்தரங்க உரிமையையே பறிக்கும் செயல். இதை எதிர்த்த வழக்கில்
உச்சநீதிமன்ற நீதிபதி டி ஒய் சந்திரசூட் கூறியிருக்கிறார்: “உங்களது வாட்சப்பையும் 360 டிகிரி கண்காணிப்பின்கீழ் கொண்டுவந்தால் நம்முடையது வாய்பூட்டு அரசாகிப் போகும்.” (டிஒஐ ஏடு) சட்டபூர்வ பாசிசஅரசை ஸ்தாபிக்க சகல வேலைகளையும் செய்கிறது சங் பரிவார். வருகிற தேர்தலில் இவர்களை வீழ்த்தாவிட்டால் நாடு நாசமாகிப் போகும்.

-Ramalingam Kathiresan

Leave a Reply

You must be logged in to post a comment.