கோயம்புத்தூர்;
கோவையில் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்
போது மாணவி உயிரிழந்த விவகாரத்தில், போலி பயிற்சியாளர்களுக்கு மோசடியாக ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நரசிபுரத்தில் கலை மகள் கலை அறிவியல் கல்லூரியில், பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது, 2 ஆம் ஆண்டு மாணவி லோகேஸ்வரி போலி பயிற்சியாளரால் தள்ளிவிடப்பட்டு உயிரிழந்தார்.

இதனையடுத்து போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்தனர். அவரு
டன் இருந்த மேலும் 3 பேரைப் பிடித்து விசாரித்தனர். அதில், ஆறுமுகமும் அவருடன்
இருந்தவர்களும் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் கல்லூரிகளில் போலி ஆவ
ணங்களை பயன்படுத்தி, சுமார் 6 ஆண்டுகளாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு போலி ஆவணம் தயாரித்து கொடுத்த ஈரோட்டைச் சேர்ந்த அசோக்
என்பவரை கைது செய்த னர். தனியார் கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கு மார்க்கெட்டிங் செய்து உதவிய தாமோதரன் என்பவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, மாணவி மரணம் குறித்து விளக்கம் அளிக்குமாறு, கலைமகள் கலை அறிவியல் கல்லூரிக்கு, கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிய அனுமதி பெறாமல், பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தது ஏன் என்றும் கல்லூரி நிர்வாகம் விளக்கம்
அளிக்க வேண்டும் என்றும் நோட்டீசில் உத்தர விட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: