தோழர் #என்.எஸ்.சுக்கு நாளை (15.07.2018) அகவை 97!

#நீடூழி வாழ்க தோழரே!

2001ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நான் ஊழியராக சேர்ந்தேன். நான் வந்த போது தோழர் என்.எஸ். மாநிலச் செயலாளர். அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்கள் வீட்டில் ஓய்வில் இருந்தார். உடம்பு சரியான பிறகு கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அலுவலகச் செயலாளராக இருந்த தோழர் ஆர். ஜவஹர் மற்றும் அலுவலகத் தோழர்கள் என்.எஸ்.க்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நானும் இருந்தேன்.

அதற்கு முன்பு தோழர் என்.எஸ். அவர்களை எனது தந்தையுடன் நான் மாநாடுகளில் கட்சி புத்தகங்கள் விற்கும் போது பார்த்திருக்கிறேன். ஆனால் பழகியதில்லை. அதற்கு பிறகு தான் அவரிடம் பேசவும், நெருக்கமாக பணியாற்றவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

தோழர் என்.எஸ். அவர்களுக்கு உதவியாக தோழர் நாகராஜன் பணி செய்து வந்தார். அவர் பாரதி புத்தகாலயம் பணிக்கு சென்ற பிறகு அன்றிலிருந்து இன்று வரை தோழர் என்.எஸ். அவர்களின் வெளியூர் பயணம், மாநாடுகள், கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என கட்சியின் முடிவுப்படி அவருக்கு துணையாக செல்லும் சிறிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

மாநாடுகள், பொதுக்கூட்டங்களுக்கு தோழர் என்.எஸ். வருகிறார் என்றால் போதும் தோழர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்படும்.

தோழர் என்.எஸ். கூட்டம் நடைபெறும் இடங்களுக்கு வண்டியிலிருந்து கீழே இறங்கியவுடன் இளம் தோழர்கள் முதல் மூத்த தோழர்கள் வரை கொடுக்கும் வரவேற்பு, கோஷங்கள் விண்ணைப் பிளக்கும்.

அவர் பேசும் போதும், பேசி முடித்த பிறகும் தோழர்கள் எழுந்து நின்று கோஷமிட்டு, அவர்கள் மரியாதை செலுத்தும் போது என் கண் கலங்கும்.

அப்போது தான் தெரிந்தது எனது கட்சிப் பணி.

இப்பேற்பட்ட அற்புதமான மக்கள் தோழருக்கு நான் சிறு உதவியாக இருந்தேன் என்று நினைக்கும் போது, எவ்வளவு கோடிகள் சம்பாதித்தாலும் இதிலிருக்கும் திருப்தியும், மன நிம்மதியும், வேறு
எந்த பணியில் இருக்காது என்று.

தோழர் #என்.எஸ்.சுக்கு #ரெட் சல்யூட்!
#நீடூழி வாழ்க தோழரே

Saravanan Kanthasamy

Leave a Reply

You must be logged in to post a comment.