புதுச்சேரி,
புதுச்சேரி காங்கிரஸ் அரசு மக்களிடம் சொல்வது ஒன்று செய்வது வேறொன்று என்ற முறையில் ஏழை எளிய நடுத்தர மக்களை கடுமையாக பாதிப் புக்கு உள்ளாக்கி வருகிறது. மக்கள் நல திட்டங்களை வெட்டி சுருக்குவது, தனியார்மயத்தை ஊக்குவிப்பது, மின் கட்டணம், தண்ணீர் வரி, வீட்டு வரி போன்ற சேவைக் கட்டணங்களை உயர்த்தி மக்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றுவது என்பதையே தன் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை ‘இஸ்கான்’ என்ற மத அடிப்படையிலான அமைப்பின் கீழ் இயங்கி வரும் ‘அட்சய பாத்திரா அறக்கட்டளை’ என்ற தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், மதச்சார்பற்ற அரசியல் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை தற்கொலைக்கு ஒப்பானது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள மதிய உணவுத்திட்டத்தில் என்ன குறைபாடு இருக்கிறது? எதற்காக தனியாரிடம் ஒப்பந் தம் போடப்பட்டுள்ளது? இந்த ஒப்பந்தம் குறித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாண்மைக் குழு, ஆசிரியர்கள், பொது மக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், இப்பணியை செய்து வரும் ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்காமல், அடிப்படையான ஆய்வு நடத்தாமல் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந் தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முட்டை வழங்குவதை கைவிடுவது, உணவுகளில் வெங்காயம், பூண்டு போன்ற மருத்துவ குணம் கொண்ட பொருட்களையும் காய் கனிகளையும் தவிர்ப்பது, சத்தான உணவை நிராகரிப்பது போன்ற ஒற்றை உணவு முறையை திணிக்கின்ற ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்தத்தை வலுக்கட்டாயமாக மாணவர் களை ஏற்க வைக்கும் செயலாகும்.  வறுமையில் உள்ள குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக் கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ளாமல் மதிய உணவு திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக அளிக்கும் நிதிச் சுமை குறையும் என்ற அம்சங்களை காங்கிரஸ் அரசு சமரசம் செய்து கொள்வது புதுச்சேரி மாணவர்களுக்கு இழைக்கும் துரோகமாகும். இது அப்பட்டமான நமது உணவு பாரம்பரியத்தின் மீதும், உணவு உரிமை மீதும் தொடுக்கப்பட்டுள்ள குரூரமான தாக்குதலாகும். ஆகவே, தனியாரிடம் செய்துகொண்டுள்ள அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு ராஜாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.