சண்டிகர்:
ஹரியானா மாநிலத்தில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, ஓட்டுநர் உரிமம், ஆயுதங்கள் வைத்துக் கொள்வதற்கான உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், ஓய்வூதியமும் வழங்கப்படாது என அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் திடீரென அறிவித்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரும் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) அல்லது ரக்‌ஷா பந்தன் (ஆகஸ்ட் 26) அன்றிருந்து அமலுக்கு வரும் என்றும் கட்டார் கூறியுள்ளார்.மேலும், காவல்நிலையத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் மற்றும் ஈவ்டீசிங் வழக்குகள் தடையின்றி விசாரிக்கப்படும் என்று கூறியுள்ள கட்டார், ‘விசாரணை அதிகாரிகள், பாலியல் குற்றங்கள் மீதான விசாரணையை 1 மாதத்திற்குள்ளும், ஈவ்டீசிங் வழக்கு விசாரணையை 15 நாட்களுக்குள்ளும் விரைந்து முடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, 6 விரைவு நீதிமன்றங்களை அமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பாஜக-வைச் சேர்ந்தவர்களாகவே இருந்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக-வைச் சேர்ந்த முதல்வரே, ஓய்வூதியம், ஓட்டுநர் உரிமம் ரத்து என்று மிரட்டியிருப்பது பாஜக-வினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.