மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் பயிர்க்காப்பீடு செய்தவர்களுக்கு வெறும் 1 ரூபாய், 5 ரூபாய் என ஒற்றை இலக்கத்தில் இழப்பீடு வழங்கப்பட்டிருப்பது, விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள பீடு மாவட்டத்தில் மட்டும், பிரதமர் பயிர்க் காப்பீடு (பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா) திட்டத்தின் கீழ், 11 லட்சத்து 68 ஆயிரத்து 359 விவசாயிகள் சேர்க்கப்பட்டனர். பயிர்க் காப்பீடுதாரர் சேர்க்கையில் மாநிலத்திலேயே பீடு மாவட்டம்தான் முதலிடத்தில் இருப்பதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் கெஜ் தாலுகாவில் மட்டும் 15 ஆயிரத்து 691 விவசாயிகள், ரூ. 51 லட்சத்து 42 ஆயிரத்தை இன்சூரன்சாக செலுத்தி இருந்தனர்.

இந்நிலையில், கெஜ் தாலுகாவில் பயிர்ச் சேதத்தைச் சந்தித்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், இழப்பீடு கோரி விண்ணப்பித்த நிலையில், அவர்களின் வங்கிக் கணக்கில் வெறும் 1 ரூபாய், 2 ரூபாயுமாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெஜ் தாலுகாவைச் சேர்ந்த 773 விவசாயிகளுக்கு தலா 1 ரூபாயும் 669 விவசாயிகளுக்கு தலா 2 ரூபாயும் 50 விவசாயிகளுக்கு தலா 3 ரூபாயும் இழப்பீடாக வந்துள்ளது. 702 விவசாயிகளுக்கு தலா 4 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 39 விவசாயிகள் ‘5 ரூபாய்’ பெற்று ‘அதிர்ஷ்டகாரரர்கள்’ ஆகியிருக்கின்றனர்.இவ்வளவு ‘பெரிய’ தொகையை பயிர்க்காப்பீடாக பெற்று பயனடைந்த விவசாயிகள் இவர்கள்தான் என்று பீடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி(பிடிசிசி) பட்டியல் ஒன்றையும் ஒட்டியுள்ளதாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.