விருதுநகர்;
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா
தேவி வழக்கில் சிபிசிஐடியு போலீ சார் வெள்ளிக்கிழமை விருதுநகர் நீதிமன்றத்தில் 1160 பக்கங்கள் கொண்ட முதற் கட்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்தும் நோக்கத்தில் செல்போனில் உரையாடினார் உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி. அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கல்லூரி முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்திய மாணவர் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

பின்பு,நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அதன் பிறகு, இவ்வழக்கு சிபிசிஐ டிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கில், நிர்மலாதேவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும், நிர்மலாதேவியின் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். இந்த நிலையில், அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ஆவணங்கள் திருடப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த வழக்கில், நிர்மலாதேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளன ர். தங்களுக்கு ஜாமீன் கோரி பலமுறை திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்
தாக்கல் செய்திருந்தனர். அம்மனுக் கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கருப்பசாமி தன்னை இவ்வழக்கில் இருந்தது விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து நீதி
பதிகள், இந்த வழக்கை 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2 ல் சிபிசிஐடி போலீசார் முதற் கட்ட குற்றப்பத்திரிகையை நீதிபதி திலகேஸ்வரி முன்னிலையில் தாக்கல் செய்தனர். அதில் 1160 பக்கங்கள் இருந்தன.

இதில், இந்திய தண்டணைச் சட்டத்தின்படி, தகவல் தொழில்நுட்ப பரிமாற்ற முறைகேடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புரிதல் மற்றும் விபச்சார தடுப்பு ஆகிய பிரிவுகள் உள்ளதாக சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக குற்றப் பத்திரிகையை சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துசங்கர லிங்கம், கருப்பையா, ஆய்வாளர் சாவித்திரி ஆகியோர் தாக்கல் செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.