சிவகாசி,
விருதுநகரில் காமராஜர் பிறந்த நாள்விழாவில் பங்கேற்க வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது : பெருந்தலை வர் காமராஜர் 116வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் கல்வித் திருவிழா ஞாயிறன்று நடை பெறுகிறது. இவ்விழாவானது, விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. காமராஜர் இல்லத்தில் இருந்து கல்வி கலச ஊர்வலம் மற்றும் திரு விளக்கு ஏற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. இந்த விழாவில்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு காம ராஜர் திருஉருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.  இதில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், காந்தி பேரவை நிறுவனர் குமரிஆனந்தன், தமிழக தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருதும், கல்விசேவை விருதும், மருத்துவ சேவை விருதும் வழங்கி கல்வி திருவிழா வில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகின்றார்.  நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதய குமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, மாஃ பா பாண்டியராஜன், டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், விருதுநகர் எம்பி ராதாகிருஷ்ணன், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபாமுத்தையா கலந்து கொண்டு பேசுகின்றனர். தமிழக அரசு சார்பில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் காமராஜர் நூற்றாண்டு விழா மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

முன்னதாக விருதுநகர் வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விருதுநகர் மாவட்ட எல்லையில் மாவட்ட அதிமுக சார்பில் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.