கோவை,
கோவையில் தேசிய பேரிடா் பயிற்சியின் போது கல்லூரி மாணவியை தள்ளி விட்ட பயிற்சியாளா் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூா் பகுதியில் வியாழனன்று தேசிய பேரிடா் மேலாண்மை குழு சார்பில் உள்ள கலைமகள் கல்லூரியில் பேரிடா் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தீ விபத்து காலங்கள், பூகம்பம் உள்ளிட்ட காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி காரணமாக மாணவிகள் சிலா் இரண்டாவது மாடியில் நிற்க வைக்கப்பட்டனா். பேரிடா் காலத்தில் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது அதே கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வந்த மாணவி லோகேஷ்வரியும் பயிற்சியில் கலந்து கொண்டார். இரண்டாவது மாடியில் இருந்து குதிக்க லோகேஷ்வரிக்கு குதிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
கீழே விழும் நபா்களை பிடிப்பதற்கு சிலா் வலையுடன் காத்துக் கொண்டு இருந்தனா். இருப்பினும் மாணவி லோகேஷ்வரி அச்சத்துடன் குதிக்க தயக்கம் காட்டினார்.இதனால் பொறுமை இழுந்த பயிற்சியாளா் மாணவியின் கையை பிடித்து தள்ளி விட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மாணவியின் தலை முதல் தளத்தில் இருந்த சிமெண்ட் தளத்தில் பலமாக மோதியது.

இதில் மாணவியின் தலை, கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. மாணவி உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே மாணவி உயிரிழந்தார். இதனைத் தொடா்ந்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பயிற்சியாளா் ஆறுமுகம் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: