ஜெய்ப்பூர்;
பறவை முட்டையை உடைத்ததற்காக, 5 வயது சிறுமியை அவரது குடும்பத்திலிருந்து 10 நாட்களுக்கு விலக்கி வைத்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் புண்டி மாவட்டத்தில் உள்ளது ஹரிபுரா கிராமம். இந்த கிராமத்திலுள்ள 5 வயது தலித் சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், ஹரிபுரா பகுதியிலுள்ள குறிப்பிட்ட பறவையினம் ஒன்று மழைக் காலத்தை அறிவிப்பதாக அக்கிராமத்தினர் நம்பி வருவதாகவும், ஆனால், கடந்த 2-ஆம் தேதி தலித் சிறுமி அந்த பறவையின் முட்டை சிலவற்றை உடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக ஊர்ப்பஞ்சாயத்து கூடி, தலித் சிறுமி அவரது வீட்டிற்குள் 10 நாட்களுக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை பஞ்சாயத்து தீர்ப்பு குறித்து போலீஸில் புகார் அளிக்கவே, போலீசார் தற்போது 10 பேரைக் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: