சென்னை,
மீனவ கிராமங்களை தனி பஞ்சாயத்துக்களாக அறிவிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீசு அனுப்பியுள்ளது.

மீனவர்களை எஸ்சி அல்லது எஸ்டி வகுப்பில் சேர்த்து அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை தனி தொகுதியாக வரையறை செய்யவும், மீனவ கிராமங்களை தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என்றும் மண்டல் கமிஷன் கடந்த 1980ஆம் ஆண்டு பரிந்துரைத்தது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்  மீனவ கிராமங்களை தனி கிராம பஞ்சாயத் தாக அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் பாதுகாப்பு சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. மண்டல் கமிஷன் பரிந்துரைபடி மீனவ கிராமங்களை கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என கொடுத்த மனு மீது இதுவரை தமிழக அரசு நடவடிக்கை இல்லை என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.மேலும் அந்த மனுவில், தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் 608 மீனவ கிராமங்கள் உள்ளன. 9.24 லட்சம் மக்கள் தொகை உள்ளது. கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கும் நிதி மீனவ கிராமங்களுக்கு சென்றடையவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு, தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் வார்டு மறுவரையறை குழு உள்ளிட்டோர் ஆகஸ்டு 17ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.