சென்னை,
வ.உ.சி நூலகத்தின் 15வது ஆண்டு விழா மற்றும் 20 நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமையன்று (ஜூலை 14) நடைபெறவுள்ளது. அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரில் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அரங்கில் மாலை 6 மணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் தலைமையில் நடைபெறும் விழாவில் கவிஞர் இளையபாரதி வரவேற்றுப் பேசுகிறார். சென்னை தொழிலாளர்களின் மாபெரும் தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு விழா தொடங்கியுள்ள இந்த தருணத்தில் வ.உ.சி நூலகம் சார்பாக தோழர் விபிசியின் நூல் களை ஒரே தொகுப்பாக இந்த நிகழ்ச்சியில் வெளியிடப் படுகிறது. நூல்களை வெளியிட்டு திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் கனிமொழி உரையாற்ற உள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், எழுத்தாளர் ச.கந்தசாமி,தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம.ராஜேந்திரன், கலாப்பிரியா நீயூஸ் 18 சீனியர் எடிட்டர் எம்.குணசேகரன், உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசவுள்ளனர். கல்யாண்ஜி ஏற்புரை நிகழ்த்துகிறார்.கவிஞர் இரா.தெ.முத்து நன்றி கூறுகிறார். தி.இந்து ரீடர்ஸ் எடிட்டர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி உள்பட பலர் நூல்களின் முதல் பிரதிகளை பெறவுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.