ராய்ப்பூர்;
சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக, பாஜக தலைமை மாந்திரீக பூஜை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2018 நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஏற்கெனவே பாஜக-தான் ஆட்சியில் உள்ளது. ராமன் சிங் என்பவர் முதல்வராக இருக்கிறார். இந்நிலையில் வரப்போகும் தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, மாந்திரீக பூஜை நடத்தியுள்ளனர். சட்டப்பேரவை அலுவலகத்திலேயே நடத்தப்பட்ட இந்த பூஜையில், முதல்வர் ராமன் சிங் மற்றும் பாஜக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.இது தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ராமன் சிங் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் இந்தியா என்று பிரதமர் மோடி ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, பாஜக-வினரோ இன்னும் மந்திரவாதியை விட்டு வருவதாக இல்லை என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.

ஆனால், மாந்திரீக பூஜையெல்லாம் நடக்கவில்லை என்றும், சட்டப்பேரவைக்கு வந்த மந்திரவாதி ராம்லால் காஷ்யப், பாஜக-வின் இளைஞரணி மண்டலத் தலைவராக இருப்பவர் என்றும் பாஜக-வினர் மழுப்பியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: