சென்னை,
குரங்கணி காட்டுத்தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வெள்ளியன்று (ஜூலை 13) சமர்பிக்கப்பட்டது.

குரங்கணி தெற்கு பீட் வனப்பகுதியில் கொழுக்குமலை அருகே ஒத்தைமரம் பகுதியில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட 23 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வருவாய்த் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் ஒருநபர் குழு கடந்த மார்ச் 13ல் அமைக்கப்பட்டது. வருவாய்த் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா சம்பவம் நடந்த குரங்கணி மலைப் பகுதியிலும், மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற பல்வேறு தரப்பினரிடமும் நேரில் விசாரணை நடத்தினார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கத் தேவையான அம்சங்கள் தொடர்பாகவும் அவர் ஆய்வு செய்தார். இந்நிலையில் குரங்கணி தீவிபத்து தொடர்பான 125 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை அதிகாரியான அதுல்யா மிஸ்ரா வெள்ளியன்று (ஜூலை 13) சமர்ப் பித்தார்.

Leave A Reply