குண்டூர், ஜூலை 13-
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில், மதச் சிறுபான்மை இளைஞர் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கட்சியின் மாநில செயலாளர் பி. மது உட்பட பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றபோது, போலீசார் அவர்களை குண்டாந்தடிகளால் தாக்கி, கைது செய்தனர். இதனை மதச்சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் கண்டித்து, காவல் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். மேலும், தங்கள் இனத்தைச்சேர்ந்த இளம்சிறுமி வன்புணர்வுக்கு முயற்சிக்கப்பட்ட வழக்கில் நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதற்காக எட்டு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர மாநில அரசு உறுதி அளித்திட்டபோதிலும், கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லை, அவர்களுக்கு எதிரான வழக்கும் விலக்கிக்கொள்ளப்படவில்லை.
(ந.நி.)