ஸ்ரீநகர்:
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயக கட்சியை (பிடிபி) உடைக்க முயன்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்த கட்சியின் தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி பாஜக-வுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி – பாஜக இணைந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த ஜூன் 19-ஆம் தேதி பிடிபி கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து மெகபூபா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலில் இருந்து வருகிறது.87 உறுப்பினர்கள் கொண்ட காஷ்மீர் சட்டமன்றத்தில் பிடிபிக்கு 28 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 25 உறுப்பினர்களும் இருக்கின்றனர். தேசிய மாநாட்டுக் கட்சி 15 உறுப்பினர்களையும், காங்கிரஸ் 12 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.இந்நிலையில், பிடிபி கட்சியை உடைத்து, குறுக்கு வழியில் அதிகாரத்தைப் பிடிக்க பாஜக முயற்சிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதற்கேற்பவே, பிடிபி கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மெகபூபாவின் குடும்பம் கட்சி விவகாரங்களில் தலையிடுவதாக அண்மையில் திடீரென புகார் கூறினர்.

இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சியை தில்லி உடைக்க முயற்சித்தால் விளைவுகள் மோசமானதாக இருக்கும்; அதனை எதிர்கொள்ள தில்லி தயாராக இருக்க வேண்டும் என்று மெகபூபா முப்தி பாஜக-வை எச்சரித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: