தருமபுரி,
நூறுநாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான நலச்சங்கத்தின் சார்பில் பென்னகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

தேசிய அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக ஊனம் 40 விழுக்காடு உள்ள அனைவருக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என பேரவை விதி 110 – ன் கீழ் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்காக, அரசாணை எண்: 27 -ம் வெளியிடப்பட்டது. அதன்படி, உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரைக்கும் வழங்கவில்லை. இதன் தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் அரசிடம் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தியது. வார்த்தையில், அரசு-தனியார் துறையில் பணி புரியக் கூடிய ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்கக்கூடிய அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என கடந்த மே 28 ஆம் தேதி 2018 அன்று அரசாணை எண்- 41 தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

எனவே இந்த அரசாணையை பயன்படுத்தி உதவித்தொகை வழங்கக்கோரியும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலையில்லா மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் பி.கே.மாரியப்பன் தலைமைவகித்தார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் மாநில துணைத் தலைவர்கள் பி.சரவணன், எஸ்.சண்முகம், மாவட்டத் தலைவர் ஜி.தும்பாராவ், மாவட்டச் செயலாளர் கே.ஜி.கரூரான், வட்டநிர்வாகிகள் கே.தனபால், கே.சென்ன மூர்த்தி, சின்னமாது ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: