தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நத்த அள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 231 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியை மகப்பேறு விடுப்பில் உள்ளார். உதவி தலைமை ஆசிரியர் தயானந்தன் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இப் பள்ளியில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் உபகரணங்கள் மற்றும் குழாய் பொறுத்தும் பணி நடைபெற்றுள்ளது. பள்ளி மாணவர்களில் சிலர் குழாய் பொறுத்தும் பணியை அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த உதவி தலைமை ஆசிரியர், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களை வகுப்பறைகளுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதில் வகுப்பறைக்கு திரும்பாத சில மாணவர்களை ஆசிரியர் தயாளன் அடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித் தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வகுப்பறைகளுக்கு வெளியே வந்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த நல்லம் பள்ளி வட்டாட்சியர் பழனியம்மாள், மாவட்டக் கல்வி அலுவலர் பொன் முடி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பெரியண்ணன், காவல் உதவி ஆய்வாளர் அறிவழகன் உள்ளிட்டோர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, மாணவர்கள் வகுப்பறைகளுக்கு சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: