புதுதில்லி :

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸ் என்ற 18 வயது சிறுமி இன்று நடைபெற்ற சர்வதேச சிறுவர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த 18 மாதத்திற்கு முன்புதான் தனது முதல் போட்டியை துவக்கிய ஹிமா தாஸ், அஸ்ஸாம் மாநிலம் நகான் மாவட்டத்தின் திங் கிராமத்திலுள்ள ஏழை நெல் சாகுபடி செய்யும் விவசாயியின் மகளாவார். தற்போது பின்லாந்து நாட்டின் தாம்ப்ரே நகரில் நடைபெற்றுவரும் 20வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகள போட்டியின் 400 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்கம் வென்று உலக சிறுவர் தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை ஹிமா தாஸ் படைத்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: