குவஹாத்தி :

அஸ்சாம் மாநிலத்தின் இரண்டு வெவ்வேறு இரயில்களின் கழிவறைகளில் இறந்த பெண்களின் சடலம் கண்டெடுப்பு இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று முன்தினம் அவாத் அஸ்சாம் விரைவு இரயிலில் திப்ருகார்லிருந்து லால்கார் சென்ற பெண் ஒருவரின் உடல் கழிவறையில் கண்டெடுக்கப்பட்டது.

இதே போல் அஸ்சாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் நகரத்தில் உள்ள அஸ்சாம் விவசாய கல்லூரியின் மாணவி. இவர் இண்டர்சிட்டி இரயில் ஒன்றில் மர்ம நபர்கள் சிலரால் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் உடல் சிமலகுரி அருகில் இரயிலின் கழிவறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அவர் ஸ்மார்ட்போன் வாங்க வைத்திருந்த 10000 ரூபாய் பணத்தை அந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இச்சம்வம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அஸ்சாம் மாணவர் சங்கம் பல்வேறு இடங்களில் ரயில்வே நிர்வாகத்தின் செயலற்ற தன்மையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு ரூ 20 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: