நாமக்கல்,
கரூர் போக்குவரத்து கழக கிளை மேலாளரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து நாமக்கல்லில் சிஐடியு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கரூர் போக்குவரத்து கழக கிளை மேலாளரின் சட்டவிரோத மற்றும் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், போக்குவரத்து ஊழியர்களிடம் அராஜக போக்குடன் நடக்கும் கரூர் பசுபதிபாளையம் காவல்துறையினரை கண்டித்தும் நாமக்கல்லில் சிஐடியு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பரமத்திவேலூர் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். ஒய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் சந்திரசேகரன், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: