திருப்பூர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்கங்
கள் சார்பில் புதனன்று திருப்பூர் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தை அமல்படுத்த வேண்டும். ஊதியம் மற்றும் பென்சன் மாற்றம், 4 ஜீ சேவையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு என்எப்டிஇ சங்க செயலாளர் அந்தோணி மரியபிரகாஷ் தலைமை வகித்தார். அலுவலர்கள் சங்க தலைவர் பழனிவேல்சாமி, ஓய்வுபெற்றோர் சங்க செயலாளர் செளந்திரபாண்டியன், என்எப்டிஇ சங்க நிர்வாகி ஜான் சாமுவேல் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளை தலைவர் வாலீசன் நன்றி கூறினார். இதில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: