தில்லி,
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா ‘இந்து பாகிஸ்தான்’-ஆக மாறிவிடும் என காங்கிரஸ் தலைவர் சசிதரூர் எச்சரித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர்,  மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஜனநாயக அரசியலமைப்பு சிதைந்து வருவதாக குற்றம்சாட்டினார். வரும் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் புதிதாக அரசியலமைப்பை உருவாக்க வேண்டியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அடுத்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்றும் சசி தரூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: