புதுதில்லி;
கடந்த 2016-ஆம் ஆண்டு பண மதிப்பு நீக்கத்தை அறிவித்த மோடி அரசு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கவே இதனை செய்தாக கூறியது. மேலும் அதிகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு சலுகைகளையும் அறிவித்தது.

தற்போது, இந்த சலுகைகள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. யூ.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.யூ.பி.ஐ. தளத்தின் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது கடைக்காரர்களுக்கு 1000 ரூபாய் வரையிலும், வாடிக்கையாளர்களுக்கு 500 ரூபாய் வரையிலும் கேஷ் பேக் சலுகையாக வழங்கப்பட்டது. இனி இந்த கேஷ் பேக் சலுகை வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீம் செயலி வழியாகப் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு மட்டும் 150 ரூபாய் பரிசு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், யூ.பி.ஐ. பரிவர்த்தனை தளத்தில் பீம் செயலியின் பங்கு ஒற்றை இலக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தளத்தில் உள்ள மற்ற முன்னணி செயலிகளான பேடிஎம், கூகுள் டெஸ் மற்றும் போன் பே போன்றவைதான் 80 சதவிகித பங்கைக் கொண்டுள்ளன. ஆகவே பீம் செயலிக்கு மட்டும் ‘பரிசு’ என்பதும் ஒரு கண்துடைப்பாகி இருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.