திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சி உப்பிலிபாளையத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையத்தை மாநில அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

வியாழக்கிழமை இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்: உப்பிலிபாளையத்தில் துவங்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளுடன் கூடிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேர மகப்பேறு சிகிச்சை, புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, இலவச பரிசோதனைகள், பிறப்பு இறப்பு பதிவு வசதி, காநோய் சிகிச்சை வசதிகள், குழந்தைகளுக்கான தடுப்பூசி வசதிகள் மற்றும் இளஞ்சிசுகளுக்கான மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவத் துறையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இவ்விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் ஒருங்கிணைந்த தொற்று நோய் கண்காணிப்பு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்ட பயிற்சி முகாமை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: