காபூல்,
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பன்ஷிர் மாகாணத்தில் பனிக்கட்டிகளால் மலைப்பகுதிகள் அமைந்துள்ளது. இந்த நிலையில், பனிக்கட்டிகள் உருகியதால், திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி, 10 பேர் உயரிழந்துள்ளனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் நிலச்சரிவில் சிக்கி சேதம் அடைந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது

இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப்  கானி, இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தேவையான உதவிகளை உடனடியாக செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply